" எல்லாரும் உங்க கம்பெனி ல தைவான் போறாங்களே, ஒரு முறை நானும் தான் போய்விட்டு வரேனே" என்று நான் இவரிடம் சொல்லியிருந்தேன். வாய்ப்பு வரும் காத்திரு என்று சொல்லியிருந்தார்.
ஆனால் எனக்கு தெரியும் அங்கே போனால் சாப்பாட்டுக்கு திண்டாட்டம் என்று. அதனால் என்ன? நமக்கு தான் ஆபத்பாந்தவன் MTR திடீர் உணவு உள்ளதே என்ற தைரியம்.
அந்த வாய்ப்பும் தீபா மூலம் கிடைத்தது. தீபாவை முன்னெச்சரிக்கை யாக தயார் செய்தேன், அவள் போவது VEGETARIANISM என்றால் என்ன விலை? என்று கேட்கும் நாட்டிற்கு என்று.அவளுக்கு கொஞ்சம் நம்ம ஊர் சாப்பாடு தான் சரி வரும். 5 நாள் தானே manage செய்து விடுவேன் என்று சொன்னாள்.
மே மாதம் முதல் வாரம் பயணம். MTR பொங்கல், Ashirwad Rice & Rajma மற்றும் Khakra எல்லாம் கட்டிக்கொண்டேன். புறப்பட்டேன்.
பயண விவரங்கள் இதோ...
04/05/07
சென்னையிலிருந்து பாங்காக் வழியாக தைபே (Taipei) சென்றோம்.
Thai Airways விமானம் எங்களை சென்னையிலிருந்து பாங்காக் அழைத்து செல்லும்போதே 25 mins லேட். அடுத்த connecting flight பிடிக்க 1 மணி நேரம் தான் இருந்தது. அதற்குள் Transfer ல் பெரிய Q'. நல்ல வேளை எங்கள் விமானத்தில் பயனிப்பவர்களை மட்டும் புதிய Q வில் சரி பார்த்து அனுமதி வழங்கினர்.
பாங்காகின் புதிய AIRPORT அது. சுவர்ணபூமி (suvarnabumi).
புதிய கட்டுமாணம். புதிய, பெரிய Arrivals & Departures. நின்று பார்க்க ஆசை தான். விமானம் கிளம்ப இன்னும் 30 நிமிடங்கள் தான் உள்ளது. தீபாவும், நானும் 2 kms ஓடி இருப்போம். Transfer Q' ஒரு end என்றால் எங்கள் விமானம் நிற்ப்பது மற்றோரு end.
இவ்வளவு அவசரமாக, காலையில் எதுவும் சாப்பிடாமல் விமானம் கிளம்புவதற்கு 5 min முன் ஏறி போய் உட்கார்ந்தோம்.
05/05/07
அதே அசதியில் தூங்இயும் போனோம். இந்த குறிப்பிட்ட route ல் அவ்வளவு கூட்டமும் இல்லை. ஆளுக்கு 4 சீட். காலை நீட்டி படுக்கலாம். பசி கூட நினைவு இல்லை.
சிறிது நேரத்திற்கு பிறகு அருகில் ஒரு குரள்.
" Madam! Good Morning!!. What would you like to have for Breakfast?"
பணிப்பெண் கேட்டார்.
எனக்கு அப்பொழுது தான் பசியே நியாபகம் வந்தது. தீபாவை எழுப்பிவிட்டு என்ன இருக்கிறது என்று கேட்டேன்.
அந்த நிமிடத்தில் தான் எங்கள் நிஜமான adventure trip ஆரம்பமானது.
முதலில் காபி கொடுத்த Airhostess, " Madam, would you like to have Pork Rice or Beef Rice?" என்று கேட்டாள். எங்களுக்கு ஷாக். Vegetarian Breakfast கொடு என்றால், அவளுக்கு புரியவுமில்லை.
அவளிடம் பேசுவதற்கு சக்தி யும் இல்லை எங்களுக்கு.
Bread ஐ காட்டி அது மட்டும் ஆளுக்கு 5 வாங்கி கொண்டு yoghurt ஐ சாப்பிட்டு வைத்தோம்.
தைபே வந்தது. மழை பெய்து கொண்டு இருந்தது. எங்களை அங்கிருந்து நேராக தைசுங்(TAICHUNG) அழைத்துப்போக ஒரு Van அனுப்பியிருந்தார்கள் எங்களின் தைவான் நண்பர்கள்.
நாங்கள் முன் பார்த்த சுவர்ணபூமி போல் இல்லாமல் சற்றே சிறிய Airport. பெயர் Taipei Chiang Kai-Shek International Airport.
தைசுங் போகும் வழி எல்லாம் மலைகள் தான். ரோட்டில் 10 meter கூட தெரியவில்லை. மழை காரணமாக mist வேறு.
3 மணி நேரம் ஆனது நாங்கள் தங்கும் ஹோட்டல் போய் சேர.
THE SPLENDOUR HOTELhttp://http//www.splendor-taichung.com.tw/tce/index.htm.
நகரின் மையப்பகுதியில் இருக்கும் 5 star Hotel. வெளியில் இன்னும் மழை. சுற்றும் கட்டிடங்கள் மயம்.
19வது தளத்திலிருந்து மழையில் தைசுங்....
தீபா ஹோட்டலின் வாசலில்..
ரூமுக்கு போய் முதல் வேலை சாப்பிட்டது தான். ரூமில் microwave நல்ல வேளையாக இருந்தது. கொண்டு போன பொங்கலில் ஒன்றை எடுத்து சூடு செய்து சாப்பிட்டோம்.
எங்கள் நண்பர்கள் மாலை வெளியே சாப்பிட அழைத்து போவதாக ப்ளான். கிடைத்த நேரத்தில் தூங்கி எழுந்து, குளித்து கீழே போய் காத்து இருந்தோம். சுமாராக ஆங்கிலம் பேசும் Front office பணியாளர்கள் இங்கே. பரவாயில்லை. நம் வேகத்துக்கு சரிப்பட்டு வரவில்லை தான்.
Phyllis San
எங்களை அழைத்துக்கொண்டு போக வந்து இருந்தார். அவர் எங்களுக்கு machines supply செய்யும் Agent.
அன்று இரவு Dinner ஒரு Indian Restaurant- ல். பெயர் CACTI. பெயருக்கு தான் இந்தியன். சமைப்பவர்கள் எல்லோரும் சைனீஸ் தான்.
எங்களுக்கு தைவானிலிருந்து moulds and machines எல்லாம் இறக்குமதி ஆகிறது. அவைகளை ஒரு agent மூலம் செய்கிறோம். இவர்கள் தான் அந்த நிறுவணம் நடத்துபவர்கள்.
CAROL CHIU & OMAR CHIU.
இனிமையாக பழகும் இவர்களுக்கு எங்களிடம் தனி அன்பு. அதுவும் OMAR க்கு இவரிடம் அலாதி பிரியம்.
சாப்பாடு சுமார் ரகம் தான்.
Dinner at Cacti
from left Omar, Omar& Carol's son Topy, Phyllis's daughter Chlorie, Phyllis
Another picture
from left: myself, Deepa, Senthil & Faye
இருந்தாலும் சாப்பிட்டு வைத்தோம்.
அதிலும் வரும் 2 நாட்கள் நாங்கள் போகும் சுற்றுலா வில் நம்ம ஊர் சாப்பாடு கஷ்டம் என்று Phyllis சொன்ன பிறகு உள்ளுக்குள் ஒரு நெருடல்.
இங்கே நாங்கள் ........
அடுத்த பதிவில் SUN MOON LAKE & PU LI பயணம் பற்றி..
1 comment:
looking forward to hearing about more adventures..... :)
Jyo.
Post a Comment