Friday, July 27, 2007

தைவான் பயணம்- பாகம் 2

06/05/07 - ஞாயிறு
முதல் நாள் இரவு டின்னரின் போதே Phyllis எங்கள் கையில் அடுத்த 2 நாட்கள் நாங்கள் போகும் TOUR பற்றிய விவரம் அனைத்தும் தந்துவிட்டார். நாங்கள் தங்கியிருக்கும் ஹோட்ட்டலின் மூலமே ஏற்பாடு. PICKUP Point- ம் அதே தான். 2 நாட்களுக்கான துணிகள் & சாப்பாடு மட்டும் எடுத்து கொண்டோம்.
Breakfast ஹோட்டலிலேயே. அது ஒரு பெரிய கொடுமை. எல்லா வகையான Bread, muffins, cereals, fruits and vegetables & juices இருக்கும். ஆனால் ஒரு வாய் கூட நிம்மதியா சாப்பிட முடியாது.
நம் எதிரிலேயே கண்ணாடி பெட்டிக்குள் மீன், lobster & நண்டு வகைகள் தண்ணீரில் மிதக்கும். யாருக்கு எது விருப்பமோ அதை அங்கேயே பிடித்து பாதி வேக வைத்து கொடுப்பார்கள்.


இங்கே இவர்களின் special உணவு "PINYIN" ( LITERALLY TEA LEAF EGG)



எனப்படும் டீ தண்ணீரில் வேக வைத்த முட்டை.
அவங்களுக்கு அது விருந்து. நமக்கோ அது கொடுமை தான்.


பாதி வெந்த மாமிசத்திற்கு ஒரு வகையான வாடை உள்ளது.

இந்த கொடுமைக்கு சாப்பிடாமலேயே இருந்து விடலாம். ஆனால் பசிக்கு என்ன செய்வது?? பழங்கள், Bread, cereals சாப்பிட்டு வைத்தோம்.

முதல் நாள் டின்னருக்கு முன் கொஞ்ச நேரம் கிடைத்தது. அதில் நாங்கள் தைசுங்கில் இருக்கும் "Jade Market" போனோம்.
அங்கு TCS, பங்களூரில் வேலை செய்யும் 4 Indians ஐ பார்த்தோம். அவர்கள் இங்கு உள்ள ஒரு நிருவனத்திற்கு software support கொடுப்பதற்காக வந்துள்ளனர்.
அதில் 1 பெண். மற்ற மூவர் ஆண்கள். எல்லோருக்குமே 30 க்குள் தான் வயது இருக்கும். நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலிலேயே தங்கியிருந்தனர்.
அவர்களை Breakfast -ல் பார்த்தோம். "எப்படி சாப்பாடு manage செய்கிறீர்கள்" என்று கேட்டோம். ஊரிலிருந்து வரும் போது ஒரு பெட்டி நிறைய சாப்பாட்டுக்கு அரிசி, பருப்பு, மற்றும் எங்களப்போல் MTR சாம்பார், curries எல்லாம் கொண்டு வந்தோம். இதில் அந்த பெண் எல்லோருக்கும் சமையலும் செய்கிறார் என்று சொன்னார்கள்.
Reception ல் எங்களின் மற்ற பெட்டிகளை 'safe custody' யில் வைத்துவிட்டு 2 நாள் Tour போக கிளம்பினோம்.
எங்களை அழைத்துப்போக Mr. STEVE KHO
வந்து விட்டார். ஆங்கிலம் பேச தெரிந்த University Student. இது part time வேலையாம்.
எங்கள் ஹோட்டலிலிருந்து கிளம்பி இன்னும் 2 பேரை அழைக்க தைசுங் railway station க்கு போனோம்.
இங்கே நான் தைசுங் ரயில்வே ஸ்டேஷன் வெளியில்

எங்களுடன் அன்று சேர்ந்தவர்கள் ஒரு ஜப்பானிய குடும்பம். அந்த குடும்ப தலைவர் TAIWAN SINKANSEN PROJECT ன் CHIEF ENGINEER.
அவர் மணைவி ஒரு சைனீஸ். அவர்களின் மகள். இவர்கள் எங்களின் அன்றைய சக பயனிகள்.
PU-LI போய் சேர 2-3 மணி நேரம் ஆனது. தைவான் நாட்டை பற்றியும் அதன் மக்களைப் பற்றியும் நிறைய தகவல்கள் சொன்னார் எங்கள் Guide.
அந்த ஊர் போகும் வழி எங்கும் 2 பக்கங்களும் பாக்கு மரங்கள் தான். பாக்கு பெரிய வியாபாரம் இங்கே என்று சொன்னார். அது மட்டும் இல்லாமல் சாலைகளின் ஓரத்தில்
கொஞ்சம் உயரமான ஒரு ரூம் கட்டி அதில் இளம் வயது பெண்களை Bikini யில் உட்கார வைத்து இருக்கிறார்கள். அவர்கள் பச்சை பாக்கு, சுன்னாம்பு இரண்டையும் வெற்றிலையில் சுற்றி
இது போல

10 piece ஆக ஒரு பாக்கெட்டில் போட்டு வைப்பார்கள். அதை அந்த வழியாக செல்லும் Truck drivers வாங்கி மெல்கிறார்கள். ம்... நம்ம ஊருல மட்டும் தான் இந்த பழக்கம் னு நினைச்சு இருந்தேன். அங்கேயும் இருக்கு. ஆனா நம்ம ஆட்கள் மாதிரி 'புளிச்' னு கண்ட இடங்கள் ல துப்பரது இல்ல. சாறை விழுங்கிவிட்டு சக்கையை தான் துப்புகிறார்கள்.

பாக்கு தவிர வாழைப்பழம், Peaches, Cranberry,grapes, pineapple,sugarcane மற்றும் மரவள்ளிக்கிழங்கு நிறைய விளைகிறது. PULI போகும் வழி எங்கும் மலைகள் தான்.
Sun, Moon Lake போய் சேர்ந்த போது Lunch Time ஆகி இருந்தது. Lake ன் கரையிலேயே நிறுத்தி விட்டு சாப்பிட போனார்கள் எல்லோரும். நானும் தீபாவும் எங்கள் மடி சாப்பாட்டை முடித்தோம். ஆளுக்கு 3 thepla. Ice Cream கிடைக்குமா என்று தேடி கண்டு பிடித்தோம். அப்படியே சின்ன round shopping.
தீபா ஏரியின் வாயிலில்


Sun, Moon lake தைவானின் ஒரு கலாச்சார சுற்றுலா மையம். இது தைவானின் largest Natural Lake ம் கூட. சுற்றிலும் பச்சை பசேலென்று மலைகள் சூழ்ந்த ஒரு அருமையான setting இந்த இடத்திற்கு. கிழக்கில் round ஆகவும் மேற்க்கில் பிறை போல் இருப்பதாலும் இதற்கு இந்த பெயர். ஏரியில் சுத்தமான தண்ணீர் நீல நிறத்தில் அதிகம் மாசு
படாமல் இருக்கிறது. இதில் Boating உண்டு. நாங்களும் சென்றோம்.

படகின் உள்ளே

இந்த ஏரியை சுற்றி 3 சைனீஸ் கோயில் இருக்கிறது. 1. WEN WU TEMPLE - இது Confucius க்கும் Kuangkung க்குமானது.
இந்த கோயிலின் உள்ளே நான்

கோயிலின் வாசலில் தீபா

இவரோடு இங்கு வேறு 2 கடவுள்களும் உண்டு. அவர்கள் Gods of Martial Arts ஆன Guonggong and Yuehfei.
அந்த கோயிலின் உள்ளே தீபா

இந்த கோயில்களின் வாயிலில் உள்ள உலக உருண்டையை பிடித்த மாதிரி இருக்கும் 2 சிங்கங்கள் தைவானிலேயே பெரியதாம்.
இதோ ஒரு சிங்கத்தின் முன் தீபா


2. HUANGCHUANG TEMPLE - ஆமாங்க நமக்கு பரிச்சயமான அதே சீன யாத்திரீகர் தான் இவர்.
இந்த கோயிலின் வாயிலின் முன் நான்

சமஸ்கிரத மொழியில் தேர்ந்த இவர் இந்தியா உள்ளிட்ட பல அண்டை நாடுகளுக்கு வந்து அங்குள்ள நல்ல இதிகாசங்களையும் வேதங்களையும் எடுத்து சைனா வுக்கு கொண்டு வந்து மொழிபெயர்த்து, 'Buddhist Records of the Western World' ஆக தன் மக்களுக்கு கொடுத்தவர். இவரின் மறைந்த உடலின் பாகங்கள் இந்த கோயிலில் பாதுகாக்கப்படுகிறது.
இவரின் நினைவாக எழுப்பியிருக்கும் கல்லின் அருகே நாங்கள்

3. Xuang Guang Temple & Tzuen Ta - The pagoda இது Chiang Kai Shek தன் அம்மா, Madam Wang ன் நினைவாக கட்டியது. 1000 மீட்டர் உயரம் இது.
இந்த ஏரியின் நடுவில் ஒரு தீவும் உண்டு. இதன் பெயர் Lalu. இங்கு பயணிகளை அனுமதிப்பதில்லை. இன்னொரு கோடியில் Tehuashe Aboriginal Village இருக்கிறது.
இதையெல்லாம் பார்த்து விட்டு இந்த ஏரிக்கு தண்ணீர் வரும் Natural spring யும் போய் பார்த்தோம்.
போகும் வழியில்


இந்த இடத்தோடு எங்களின் அன்றைய Tour முடிவடைந்தது. எங்களை (myself & deepa) ஒரு Health Resort & Spa
இந்த இடம்

வில் 5PM க்கு கொண்டு விட்டு விட்டார்கள். புது இடம். English ஏ தெரியலை யாருக்கும். தைரியமாக தங்கினோம். காபி 150/- NTD இங்கு. மனசு வந்து வாங்கிய ஒரு பொருள் இது தான்.
இது பெரிய சைஸ் பீர்க்கங்காய் நார். விலை 100NTD


அன்றைக்கு தீபாவுக்கு Rice & Rajma வும் Cup-O-Noodles ம் தான்.

1 comment:

துளசி கோபால் said...

பயணக்கட்டுரை அருமையா இருக்குங்க.

நான் இன்னும் அந்தப் பக்கம் போகலை. நம்ம நண்பர் ஒருத்தர்( அவரும் பதிவர்தான்) அங்கே இருக்கார்.

அருமையா ஊராத்தான் இருக்கு.