ஒரு வழியாக யோசித்து முடித்து டீமை தேர்ந்தெடுத்துடாங்க. 2 நாள் முன்னாலே வரைக்கும் எனக்கு கவலை தான் நம்ம சேவாகை எடுப்பாங்களா ன்னு. என்னவோ இப்போ தான் கொஞ்ச நாளா அவரு நல்லா விளையாடாம போயிட்டாரு. கொஞ்ச நாள் முன்னால வரைக்கும் அவரை தூக்கி தலை மேல உக்காத்தி வச்சு இருந்த ஆட்களுக்கு இப்போ அவர் வேனாமாம். ம்ம்ம்..... எல்லாம் காலம் தான். அப்படியே இன்னொரு சந்தோஷம் நம்மூரு தினேஷ் கார்த்திக் செலெக்ட் ஆனது தாங்க. மஹாராஷ்ட்ரா மக்கள் ரமேஷ் பொவார் ஐ எடுக்க சொல்லி ரொம்ப ப்ரெஷ்ஷர் செஞ்சங்க ன்னும் கேள்வி. எப்படியோ வேர்ல்டு கப் -ல மானத்த வாங்காம ஃபைனல் வரைக்கும் வந்தா சரி தான்.
கர்ணாடகம்
காவேரி க்கு ஒரு வழியா தீர்ப்பு கெடச்சு நமக்கு நல்ல வழி பொறந்தாச்சு ன்னு நினைத்து சந்தோஷப்பட க்கூட முடியலைங்க நம்மாலே. இப்போ அவங்களுக்கு ஹோசூர் வேனுமாம். 'சின்னப்புள்ள கதையா இல்ல இருக்கு'. சாக்லேட் கேட்டு இல்ல ன்னா அப்ப பிஸ்கேட் கொடு ன்னு அழவுற மாதிரி. இவங்களுக்கு என்ன தான் வேனும்னு யாராவது கேட்டு சொன்னா தான் உண்டு. படிச்ச பசங்க பேசுற பேச்சாவே தெரில.
எதுனா ஒன்னு னா உடனே தமிழ் காரங்களை அடிக்க வேற ஆரம்பிச்சுடராங்க. பாகிஸ்தான் காரன் காஷ்மீர் கேக்கறான். சைனா காரன் அருணாசல் ப்ரதேஷ் கேக்கறான். எல்லாருக்கும் கொடுத்துட்டு நாம வாயில விரலை போட்டு இருக்க வேண்டியது தான்.
No comments:
Post a Comment