Showing posts with label சங்கீதம். Show all posts
Showing posts with label சங்கீதம். Show all posts

Friday, February 23, 2007

வாழ்க சென்னை சங்கமம்!!!!!


சென்னை ல ' இந்த மாதிரி ஒரு விழா நடக்குதுன்னே எனக்கு 3 நாளா நியாபகம் இல்லாம போயிட்டது. இன்னைக்கு காலைல ஒரு ஃப்ரெண்டு கிட்ட பேசிட்டு இருக்கும் போது அவங்க சொன்னாங்க. எல்லா பார்க் லயும் கச்சேரி எல்லாம் கூட நடக்குது ன்னு அவங்க சொன்னதும் எனக்கும் ஆர்வம்.போய் பார்த்துட்டு தான் வருவோமே ன்னு. இன்றைய HINDU வை மேஞ்ச போது மைலாப்பூர் ல நாகேஸ்வர ராவ் பார்க் - ல அருனா சாயிராம் இருந்தது. நமக்கு தான் அருணா பாட்டு ன்னாலே உயிர் ஆச்சே. ஃப்ரீ -ன்னு வேர பொட்டுட்டாங்களா? கேக்கவே வேனாம். 6.30 க்கு கச்சேரி. 6 க்கே ஃப்ரெண்டும், நானும் ஆஜர்.முதல் நிகழ்ச்சி ஒரு வில்லு பாட்டு காரங்க நல்லாவே கண்ணகி, கோவலன் கதை சொன்னாங்க. ரசிக்கும்படியா இருந்தது. அடுத்து அருணா சாயிராம். முதல் பாட்டு ஒரு மல்லாரி பாடினாங்க. அடுத்தது 'பிரவா வரம் தாரும்' னு பாபனாசம் சிவன் கீர்த்தனை 'லதாங்கி' ராகத்துல. 3 வதாக 'ஆடாது அசங்காது வா' எனும் மத்யமாவதி ராகத்தில் அமைந்த ஊத்துக்காடு வேங்கடசுப்பையர் பாடல்.இந்த பாட்டில் சில கச்சேரிகளா இவங்க வேறு சில பாடல்களையும் சேர்த்து பாடும் வழக்கம். அது போல் இன்றும். பார்க் ல நடக்கும் கச்சேரி. கூட்டம் அதிகம். சத்தமும் அதிகம். மைக் படுத்தின பாடு கேக்கவே வேனாம். இதற்க்குள் ஆடியன்ஸ் நேயர் விருப்பம் வேற. கேட்ட பாட்டையே எவ்ளோ நாள் தான் கேக்கறது. திரும்ப 'மாடு மேய்க்கும் கண்ணா', மதுரை சோமு அவர்களின் 'என்ன கவி பாடினாலும்', 'தீர்த்த விட்டல' அபங்கம் & நிறைவாக ஊத்துக்காடு பாட்டு 'காளிங்க மர்த்தன தில்லானா. 90 நிமிஷத்தில் நிரைவாக இருந்தது. இது போல வருஷா வருஷம் வந்தா என் போல் கர்ணாடக சங்கீத ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.