Sunday, April 22, 2007

கதை கேளு கதை கேளு part -7

பெரிய இடைவேளை விட்டு இன்று மறுபடியும் ............

இடைப்பட்ட காலத்தில் கோடைக்காணல் போய் வந்து விட்டேன்.

இனி அம்மாவைப்பற்றி,,

அம்மா...

மைதிலி அவர் பெயர்....

முன் சொன்னது போல் சின்ன வயதிலேயே கல்யாணம் செய்துகொண்டு இந்த வீட்டிற்கு வந்தவர்.

பாட்டியின் நிழலில் இருந்ததால் அந்த அளவு நிர்வாக திரன் இல்லாதவர். இருந்தாலும் நன்றாகவே கற்றுக்கொண்டு வருகிறார்.

அப்பா வின் இயல்புக்கு சற்றும் சளைக்காமல் ஈடு கொடுத்து வாழ்ந்து வருபவர்.

பாட்டிக்கும் தாத்தாவுக்கும் மருமகள் அவர்கள் போலவே அமைந்ததில் திருப்தி.

வேலை செய்ய அசராத ஜீவன், அம்மா. உதவி கேட்டால் நிச்சயம் செய்வார். அம்மா உதவி இல்லாமல் நான் என் 2 குழந்தைகளையும் வளர்த்து இருக்கவே முடியாது.

பிரயாணம் செய்ய அஞ்சவே மாட்டார். அம்மாவுக்கும் கோபம் வரும். சில நிமிடங்கள் தான்.

7 மாதத்தில் பிறந்த குறைப்பிள்ளை இவர். இதனால் இன்று வரை, அடிக்கடி உடல் சுகம் இல்லாமல் போய்விடும்.

சின்ன வயதில் எப்படி அவரை பார்த்தேனோ அப்படியே இன்று வரை இருப்பவர். குண்டாகியே பார்த்தது இல்லை.

அம்மாவுக்கு பொறுமை அதிகம். அந்த அளவு நாங்கள் இல்லை.
எந்த அளவு உடல் சுகம் இல்லாமல் இருந்தாலும் மற்றவரிடம் சொல்லும் பழக்கமே இல்லாமல் அதுவே பெரிதாகி மற்றவருக்கு தெரியும் வரை பொறுமை காப்பவர்.

இது தேவையா என்று தெரியவில்லை.

ஒரு காரியம் செய்ய முடிவு எடுத்து விட்டால்... எப்பாடு பட்டாவது அதை முடித்து விட்டு தான் தூங்குவார்.

அம்மா கைப்பக்குவம் 60% ரகம். டிபன் நன்றாக செய்வார்.

என் அம்மாவைப்பற்றி நான் சொல்வதை விட நீங்களும் கொஞ்சம் சொல்லலாமே...

Sriram, Sridevi, Appa, Athai........ please give us your feedback.

1 comment:

Anonymous said...

Vidhya,

As far as my observation goes, Amma is very sensitive, will stick to detail and very very sincere in whatever she does. Enjoys Music & dance. She is very committed to everything she does, even if it is preparing bakshanam for anybody who comes to our house. Needless to say that she is generous and offers help to everyone who deserves it. For me , I wish I had at least 20% of qualities she has.

Devi