ஆனாலும் இனி தொடர்ந்து எழுதலாமென்று .....
சரி, இவ்வளவு நாள் எங்க மா போயிருந்த நீ???
சும்மா தான் இருந்தேன்... பெரிசா ஒன்னும் வெட்டி முறிக்கல. சோம்பல் தான்..
OK. இன்றைய தலைப்பு...
சுய புராணத்தை தொடர வேண்டியது தான்.
So. மாமியார் மற்றும் மாமனார் பற்றி.
மாமியார்
இதோ நாங்கள் இருவரும் ஊட்டியில்....
என் கல்யாணத்துக்கு வந்தவர்கள் அவரிடம் கேட்ட முதல் கேள்வி, கல்யாணம் உன்
பெண்ணுக்கா? பையனுக்கா?? என்று தானாம். அந்த அளவு எங்களுக்குள் உருவ ஒற்றுமை.
என்னை பெண் பார்க்க வந்த அன்றே தன் சம்மதத்தை சொல்லி விட்டார். எல்லாமே அவருக்கு Short and Crisp ஆக இருக்க வேண்டும்.
கடவுளே ஆனாலும் தப்புன்னா தப்பு தான் அவருக்கு.குடும்பத்தில் ஒரு விதமான Detached
Attachment அவருக்கு. வந்தியா? வா. போறியா?? போ. இது தான் அவரின் குணாதிசயம்.
வீட்டு வேலைகளிலோ, சமையலிலோ குறை ஒன்றும் வைக்க மாட்டார். அதுவும் என்
மாமனாரை கவனிப்பதில் தனி அக்கறை. எல்லா வேலைகளும் முடிந்தவுடன் பூஜை செய்ய
போனால் 1 மணி நேரம் ஆகும்.
பெரிய family க்குள் தம்மை ஒரு முழுமையுடன் புகுத்திக்கொண்டு, அதன் ups and downs
ல் என் மாமனாருக்கும் தோள் கொடுத்தவர். முதல் மாட்டுப்பெண் எப்படி நடக்க
வேண்டுமோ, அப்படி இருந்தவர்.
பரமாச்சார்யாள் மேல் அளவு கடந்த பக்தி. இல்லை அதற்க்கும் மேல். ஈடுபாடு சொல்லலாம்.
பட்டு கட்ட மாட்டார். படாடோபத்தில் அவருக்கு ஆர்வம் இல்லை. தன்னையும் அழகு
செய்வதில் விருப்பம் கிடையாது. பிறர் சமைத்தால் சாப்பிட மாட்டார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வெளியே போவதை தவிர்த்து விடுவார்.
தவறாமல் மாதம் தோறும் போகும் ஒரே இடம்..
காஞ்சிபுரம்.
மாமனார் வேலையிலிருந்த சிதம்பரத்திலிருந்து பஸ் பிடித்து காஞ்சி போய் பரமாச்சார்யாரை பார்த்து விட்டு உடனே திரும்ப வந்து விடுவார். என்ன பேசுவாரோ, என்ன கேட்பாரோ தெரியாது. சில சமயம் சொல்வார். நிறைய ஆன்மீக புத்தகங்கள் படிப்பார். பகவான் ரமனரிடமும் அவரின் அறிவுரைகளிலும் ஈடுபாடு.
மொதத்தில் நம் சிற்றரிவுக்கு எட்டாத விஷயங்களில் நாட்டம்.
மாமனார் சில சமயம் ரொம்ப கோவமாக" நான் ஒரு நாள் உங்களை எல்லாம் விட்டுட்டு
போக போறேன், நீங்க எல்லோரும் சிரமப்பட போறீங்க" என்று சொல்வார். அதுக்கு மாமியார்
அப்படி தான் நடக்கனும் னு இருந்தா, நடக்கட்டும் என்பார் கூலாக.
எல்லாம் சரி தான். அவரிடம் என்க்கொரு வருத்தம் உண்டு. தன் உடல் ந்லையில்
அக்கறையே எடுத்துக்கொள்ள மாட்டார். BP, Hyper tension எல்லாம் உண்டு. ஆனால்
அதற்கு உண்டான வைத்தியத்திற்கு ஒத்துப்போக மாட்டார். எங்கேயாவது நம்மை
ஹாஸ்பிடலில் சேர்த்து விட்டால் நம் ஆசாரம் போய் விடுமே என்ற பயமாக கூட
இருக்கலாம்.
மாமனார் ரிடையர் ஆகி அவர்களும் மயிலாடுதுரை ஜாகை வந்தவுடன், அவர் போகும்
கோயில், மடங்களின் என்னிக்கையும் அதிகம் ஆகின. ஆனால் இப்பொழுது தன் பிள்ளையின்
(சுதாகர்)நலனுக்காகவே இருந்தது. என் மகள் பிறந்தவுடன் முன் இல்லாத அளவு
குடும்பத்தில், முக்கியமாக பேரப்பிள்ளைகளின் பேரில் பற்று அதிகம் ஆனதாக எனக்கு
தெரிந்தது.
சில சமயம் சொல்லிக்கொள்வார், "இப்படியே உழன்று கொண்டே இருந்தால் எப்ப தான் கரை
ஏறுவது?" என்று. எல்லோரும் ஒரு நாள் கரை ஏற காத்திருப்பவர்கள் தான். ஆனால் அவர்
போல் அவசரம் அவசரமான் இல்லை.
முதல் நாள் December லீவு காரணமாக என் நாத்தனாருடன், என் பையணையும் அவள்
பைய்ணையும் அனுப்பி விட்டு, நானும் சுதாகரும், என் பெண்ணுடன் மறுநாள் போவதாக
ஏற்பாடு. அவர்களுக்கு அன்று இரவு, சாதம் பிசைந்து போட்டு, ரொம்ப நேரம் என்
நாத்தனாரிடம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு படுக்கப் போனவர். விடியற்காலையில் நெஞ்சு
வலி என்று டாக்டரிடம் காட்ட போயிருக்கிறார். எங்களுக்கும் போன் வந்து சீக்கிரமே
கிளம்பிவிட்டோம்.
ஹாஸ்பிடலில் ECG erratic ஆக இருந்தவுடன் Heart Attack என்று உறுதி செய்து
thrombolise செய்ய மருந்து கொடுத்தும், போய்விட்டார். அதும் எப்படி, அன்று காலை
சாப்பிட்ட காபி வரை அவர் கையாலேயே சாப்பிட்டுவிட்டு. மற்றவரை எதிர்ப்பர்க்காமல்.
யாருக்கும் , பிள்ளையின் வரவுக்கு கூட, காத்திராமல். 64 வயதிலேயே.
அவர் இன்னும் இருந்து தன் பிள்ளையின் உயர்வுகளை பார்க்காமல் போனது எல்லாருக்கும் வருத்தம். இன்று வரை மாமனார் சொல்லிக்கொண்டு இருக்கிறார். நான் தான் இங்கே கஷ்டப்படுகிறேன் என்று. சரி தான்.
புருஷன் இல்லாமல், விதவை பெண்களால் காலம் தள்ளி விட முடிகிறது. ஆண்களால் பெண்டாட்டி இல்லாமல் அவர்களின் வாழ்வில் ஏன் ஒரு வெறுமை சூழ்ந்து விடுகிறது???
Male Chauvinists யாராவது பதில் சொல்லுங்கள்.
அடுத்தது மாமனாரைப் பற்றி........................